ஹிஸ்புல்லாஹ் அசாத் சாலி இராஜினாமா - அதிவிசேட வர்த்தமானி வெளியானது - News View

About Us

About Us

Breaking

Monday, June 3, 2019

ஹிஸ்புல்லாஹ் அசாத் சாலி இராஜினாமா - அதிவிசேட வர்த்தமானி வெளியானது

கிழக்கு மாகாண, மேல் மாகாண ஆளுநர்களான ஹிஸ்புல்லாஹ் மற்றும் அசாத் சாலி தமது பதவிகளிலிருந்து இராஜினாமா செய்துள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் பதவி விலகியதை உறுதிப்படுத்தி அரசாங்கத்தினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் ஆளுநர்களான அசாத் சாலி, ஹிஸ்புல்லா ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் பலதரப்பினராலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் குறித்த மூவரும் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி கண்டியில் அதுரலிய ரத்ன தேரர் நான்காவது நாளாகவும் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

இந்த நிலையில் ஆளுநர்களான அஸாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா ஆகியோரின் இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொண்டார். 

இதனை அடுத்து தனது உண்ணாவிரத போராட்டத்தினை ரத்ன தேரர் கைவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment