2 கோடியே 60 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளுடன் சிங்கப்பூர் தம்பதியினர் கைது - News View

About Us

About Us

Breaking

Friday, June 28, 2019

2 கோடியே 60 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளுடன் சிங்கப்பூர் தம்பதியினர் கைது

சட்டவிரோதமான முறையில் 2 கோடியே 60 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் கொண்டுவர முற்பட்ட சிங்கப்பூர் தம்பதியினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 

55 மற்றும் 45 வயது மதிக்கதக்க இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த நபர்கள் அந்நாட்டின் பிரதானமாக பணப்பறிமாற்றல் நிறுவனம் ஒன்றின் உரிமையாளர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த நபர்கள் இவ்வாண்டு மாத்திரம் 6 முறை இலங்கை வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

குறித்த நபர்கள் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் சிங்கப்பூரில் இருந்து வருகை தந்த சிங்கப்பூர் விமான சேவைக்குச் சொந்தமான QH 468 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அவர்கள் அணிந்திருந்த ஆடைகள் மற்றும் அவர்களின் உடலில் 4 கிலோ 850 கிராம் நகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

சம்பவம் தொடர்பில் சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment