1011.3 கிலோ கிராம் பீடி இலைகளுடன் இருவர் கைது - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 4, 2019

1011.3 கிலோ கிராம் பீடி இலைகளுடன் இருவர் கைது

மன்னார், தாழ்வுப்பாடு பிரதேசத்தில் 1011.3 கிலோ கிராம் பீடி இலைகளை இன்று (04) அதிகாலை கடற்படையினர் கைப்பற்றியுள்ளதோடு, சந்தேகத்தின் அடிப்படையில் இருவரைக் கைது செய்துள்ளனர்.

குறித்த பீடி இலைகள், 33 பொதிகளில் அடைக்கப்பட்ட நிலையில், தாழ்வுப்பாடுக் கடற்கரையோரத்தில் கரையொதுங்கியதாகவும், இதனைத் தொடர்ந்து 27, 56 வயதுகளையுடைய இரு சந்தேக நபர்களைக் கைதுசெய்துள்ளதாகவும், கடற்படையினர் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்டுள்ள பீடி இலைகளுடன் சந்தேக நபர்களை, யாழ். சுங்கத் திணைக்களத்தினரிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment