யாழில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் இருவரை காணவில்லை - பொலிஸில் முறைப்பாடு - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 4, 2019

யாழில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் இருவரை காணவில்லை - பொலிஸில் முறைப்பாடு

யாழ். காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் இருவர் காணாமல் போயுள்ளதாக, ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் இன்று (04) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

காரைநகரைச் சேர்ந்த கோடீஸ்வரன் குப்பிரியன் (23), தவராசா சத்தியராஜ் (26) ஆகியோரே காணாமல் போயுள்ளதாக குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காரைநகர் வடக்கு கடற்பரப்பில் நேற்று முன்தினம் (02) மதியம் 3.30 மணியளவில் மீன்பிடிப்பதற்காகச் சென்ற இருவரும், இதுவரையில் வீடு திரும்பவில்லை.

குறித்த இருவரையும் ஏனைய மீனவர்கள் தேடியபோதும், கண்டுபிடிக்க முடியவில்லை. 

குறித்த இரு மீனவர்களும் காணாமற்போன நிலையில், ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் பெற்றோர்முறைப்பாடு செய்துள்ளனர்.

அதேவேளை, குறித்த இரு மீனவர்களும் காணாமல் போனமை தொடர்பில் கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை மற்றும் மீன்பிடி அமைச்சிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர். 

சுமித்தி தங்கராசா - யாழ்ப்பாணம் நிருபர்

No comments:

Post a Comment