"நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒரு சட்டமே அமுலில் உள்ளது, சமய ரீதியில் சட்டங்கள் மாறுபடமாட்டது, அரபு மொழி, அரேபிய சட்டம், மற்றும் ஷரீஆ சட்டம் என்பவற்றை ஒருபோதும் இந்நாட்டில் நடைமுறைப்படுத்த முடியாது" என அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் கண்டிய சட்டம், தேசவழமைச் சட்டம், முஸ்லிம் தனியார் சட்டம் திருமணம், விவாக ரத்து, வாரிசுரிமை போன்ற சில விவகாரங்களுக்கு தனித்துவமான சட்டங்கள் காலாகாலமாக இருந்து வருகின்றன.
இங்கு அரேபிய சட்டமோ, ஷரீஆ சட்டமோ அமுலில் இல்லை, ஆனால் பாலி சம்ஸ்கிருத மொழிகளில் இந்து பௌத்த மத சாஸ்திரங்கள் இருப்பது போன்று இஸ்லாமியர்களது சமய விவகாரங்கள் அரபு மொழி மூலங்களில் இருந்தே பெறப்படுகிறன.
அரபு மொழி ஒரு சர்வதேச மொழி மட்டுமல்லாது இலங்கையின் நட்பு நாடுகளான அரபு தேசங்களில் மொழியாகும்.
அரசாங்கத்தின் பொறுப்பான ஒரு அமைச்சர் வெளியுறவுக் கொள்கைகள் மற்றும் இலங்கையின் நீதித்துறை விவகாரங்களில் இவ்வாறு பொறுப்பற்ற அறிக்கைகளை விடுவது முஸ்லிம்கள் மீதான காழ்ப்புணர்வு பரப்புரையாகவே கருதப்பட வேண்டும்.
அரசின் பங்காளிகளாக மௌனிகளாக இருக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் பாராளுமன்ர் உறுப்பினர்கள் சற்று விழிப்புடன் இருத்தல் காலத்தின் தேவையாகும்!
கலாநிதி மஸீஹுத்தீன் இனாமுல்லாஹ் (நளீமி)
No comments:
Post a Comment