இரு மாதங்களாக பாதுகாப்பு சபையை கூட்டாதது பாரதூரமான விடயம் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.
தங்கல்லை கால்டன் இல்லத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் இறுதியாக பெப்ரவரி மாதமே பாதுகாப்பு சபை கூடியதாக பாராளுமன்ற தெரிவுக் குழுவில் தெரிவிக்கப்பட்டது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர்,
தாக்குதல் தொடர்பாக தகவல் இருந்தும் பாதுகாப்பு சபை 2 மாதங்களாக கூட்டப்பட்டிருக்கவில்லை. யுத்தத்தை முடிவு கட்ட பாதுகாப்பு சபையை வாராந்தம் கூட்டி புலனாய்வு தகவல்களை ஆராய்ந்தோம். யுத்தம் முடிந்த பின்னரும் பாதுகாப்பு சபை தொடர்ச்சியாக கூடியது.
நிலைமை குறித்து உணராது செயற்பட்டுள்ளார்கள். இதற்கு தலைமைத்துவத்தில் இருந்து சகலரும் பொறுப்பு கூற வேண்டும் எனவும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment