23 லெப்டொப்,138 டெப், 03 கணனிகள், 12 பென்ட்ரைவ்கள் தொடர்பில் தீவிர ஆய்வு - கைதாகியுள்ள 09 பெண்கள் உட்பட 87 பேர் தொடர்ந்தும் விசாரணை - News View

About Us

About Us

Breaking

Thursday, May 30, 2019

23 லெப்டொப்,138 டெப், 03 கணனிகள், 12 பென்ட்ரைவ்கள் தொடர்பில் தீவிர ஆய்வு - கைதாகியுள்ள 09 பெண்கள் உட்பட 87 பேர் தொடர்ந்தும் விசாரணை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் பயன்படுத்திய தொலைபேசி இலக்கங்கள் மற்றும் அதனுடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள 1,800ற்கும் மேற்பட்ட தொலைபேசி இலக்கங்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவு பொலிஸார் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இதேவேளை, பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுடன் தொடர்பு வைத்திருந்தவர்களிடமிருந்து லெப்டொப், டெப், கையடக்கத் தொலைபேசி, கணனி, சிம் கார்ட் உட்பட பெருந் தொகையான உபகரணங்கள் சி. ஐ. டியினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அந்த உபகரணங்கள் தொடர்பாகவும் பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை மற்றும் பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணை நடவடிக்கைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தில் நேற்றுக் மாலை நடைபெற்றது. 

இங்கு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் விளக்கமளிக்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் பயங்கரவாதிகளுடன் தொடர்பை பேணி வந்தவர்கள் தொடர்பில் சி.ஐ.டி மற்றும் ரி.ஐ.டியினர் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்றனர். இதன் பலனாக பல்வேறு தகவல்கள் அம்பலமாகிய வண்ணம் உள்ளன.

இதன் ஓர் அங்கமாகவே, தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் பயன்படுத்திய தொலைப்பேசி இலக்கங்கள் மற்றும் அந்த இலக்கங்களுடன் தொடர்பை ஏற்படுத்திய, பேணிவந்த 1,800 இற்கும் மேற்பட்ட தொலைபேசி இலக்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவு பொலிஸார் ஆராய்ந்து வருகின்றனர்.

அத்துடன் பயங்கரவாதிகளுடன் தொடர்பை பேணி வந்தவர்களிடம் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் போது பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுடன் தொடர்பு வைத்திருந்தவர்களிடமிருந்து பெருந்தொகை உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இதற்கமைய 23 லெப்டொப்கள், 138 டெப் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள், 3 கணனிகள், 30 வெளியில் பயன்படுத்தப்படும் ஹார்ட் டிஸ்க்கள், 142 சிம் கார்ட்கள, 12 பெண் ட்ரைவ்கள் மற்றும் 67 சீடி மற்றும் டீவிடீ பிளேயர்கள் போன்ற பெருந்தொகையான உபகரணங்கனையே சி.ஐ.டியினரால் கைப்பற்றப்பட்டு ஆராயப்பட்டு வருவதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

இதேவேளை, பயங்கரவாதிகளுடன் தொடர்பை பேணி வந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ள 7 பெண்கள் உட்பட 66 பேரும் பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு பெண்கள் உட்பட 21 பேர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

ஸாதிக் ஷிஹான்

No comments:

Post a Comment