பயங்கரவாதத்தை ஒழிக்க படையினருடன் இணைந்து முஸ்லிம்கள் போராடும் வேளையில் இனவாத ஊடகங்களால் முஸ்லிம்கள் வேதனையடையந்துள்ளனர் - News View

About Us

About Us

Breaking

Friday, May 31, 2019

பயங்கரவாதத்தை ஒழிக்க படையினருடன் இணைந்து முஸ்லிம்கள் போராடும் வேளையில் இனவாத ஊடகங்களால் முஸ்லிம்கள் வேதனையடையந்துள்ளனர்



ரீ.எல். ஜவ்பர்கான்
பயங்கரவாதத்தை ஒழிக்க முழு முஸ்லிம் சமுகமும் இராணுவத்தினருடனும் பொலிசாருடனும் இணைந்து பாரியளவிலான செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் நிலையில் சில இனவாத ஊடகங்களின் செயற்பாடுகளினால் முஸ்லிம்கள் மிகவும் மன உழைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். தயவுசெய்து வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் நடவடிக்கைகளை இத்தகைய ஊடகங்கள் கைவிடவேண்டுமென விவசாய கிராமிய பொருளாதார அபிவிருத்தி நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர்அலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நேற்று (31) காலை ஓட்டமாவடியிலுள்ள அமைச்சரின் அலுவலகத்தில் ஊடகவியலாளரிடம் கருத்து வெளியிட்டபோதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அமைச்சர் இந்த நாட்டு முஸ்லிம்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் மிகவும் மனமுடைந்து போயுள்ளனர். சகோதர சமுகமொன்றிற்கெதிராக நடந்த அட்டூழியங்கள் குறித்து மிகவும் வேதனையடைந்த நிலையில் இதற்கான பாரியளவிலான எதிர்ப்பலைகளைகளையும் காட்டிவருகின்றனர்.

இந்த நிலையில் சில இனவாதத்தைக் கக்குகின்ற ஊடகங்ள் முக்கிய பிரமுகர்களையும் அரசியல்தலைமைகளையும் காட்டிக்கொடுப்பதனூடாக ஒட்டுமொத்த முஸ்லிம் சமுகத்தின் சாபத்திற்கும் உள்ளாகி வருகின்றன.

இனவாதத்தை விதைத்து முன்னேற முனைந்தவர்கள் வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை. அது தங்களின் அலைவரிசைகளை பிரபலப்படுத்த உதவுமே தவிர எதிர்காலத்தில் மக்கள் தூக்கி வீசிவடுவர்கள் என மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment