அரசியல் மற்றும் இராணுவ விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் ஆர். கிளார்க் கூப்பர் (R. Clarke Cooper) ஜூன் மாத முற்பகுதியில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அவ்வலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அரசியல் மற்றும் இராணுவ விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் ஆர். கிளார்க் கூப்பர் சிங்கப்பூர், இந்தியா மற்றும் இலங்கைக்கான விஜயத்தை மே 29 ஆம் திகதியிலிருந்து ஜூன் 7 ஆம் திகதி வரை மேற்கொள்கின்றார். இந்நிலையிலேயே, அவர் இலங்கைக்கும் விஜயம் செய்யவுள்ளார்.
இலங்கைக்கான தனது விஜயத்தின்போது, அரசாங்க அதிகாரிகள் மற்றும் நிபுணர்களை அவர் சந்திக்கவுள்ளதோடு, பாதுகாப்பு நிலவரம், சமாதானம், கண்ணிவெடி அகற்றும் விடயம், பயங்கரவாதத்தை முறியடித்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளார்.
No comments:
Post a Comment