டெங்கு பரவுவதற்கான சாத்தியம் - பொதுமக்களுக்கு எச்சரிக்கை - News View

About Us

About Us

Breaking

Friday, May 3, 2019

டெங்கு பரவுவதற்கான சாத்தியம் - பொதுமக்களுக்கு எச்சரிக்கை

மழையுடனான காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் டெங்கு நோய் பரவுவதற்காக சாத்தியம் காணப்படுவதாக, சுகாதாரப் பிரிவினர் எச்சரித்துள்ளனர்.

எனவே, பொதுமக்களை அவதானத்துடன் இருக்குமாறும் சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்தது.

டெங்கு நுளம்புகள் பரவும் இடங்களை துப்புரவு செய்யும் நோக்கில் தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் நாடளாவிய ரீதியில் கடைப்பிடிக்கப்படவுள்ளது. இதற்கமைய, இம்மாதம் 08ஆம் திகதி முதல் 14ஆம் திகதிவரை டெங்கு ஒழிப்பு வாரம் கடைப்பிடிக்கப்படவுள்ளது.

முப்படையினர், பொலிஸார் மற்றும் சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் ஆகியோர் டெங்கு நுளம்புகள் பரவும் இடங்களில் விசேட சோதனை நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர் எனவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment