கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக கல்வி நடவடிக்கைகள் ஒத்தி வைப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, May 3, 2019

கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக கல்வி நடவடிக்கைகள் ஒத்தி வைப்பு

கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 06ஆம் திகதி ஆரம்பிக்கப்பட மாட்டாது என, அவ்வளாக முதல்வர் பேராசிரியர் வ.கனகசிங்கம் தெரிவித்தார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைய இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், குறித்த காலத்தில் திட்டமிடப்பட்டிருந்த கல்வி நடவடிக்கைகள் மற்றும் பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பல்கலைக்கழகங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் மானியங்கள் ஆணைக்குழுவின் அறிவித்தலுக்கமைய கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கும் திகதிகள் பின்னர் மாணவர்களுக்கு அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

அப்துல் பரீட் 

No comments:

Post a Comment