2019ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்படுவதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வீ.சனத் பூஜித் தெரிவித்தார்.
இதற்கமைய, இம்மாதம் 24ஆம் திகதிவரை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் எனவும், அவர் தெரிவித்தார். 2019ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் இடம்பெறவுள்ளது.
அரச பாடசாலைகள் மற்றும் அனுமதிக்கப்பட்ட பிரிவினாக்களுக்கான உரிய விண்ணப்பங்கள் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு. இதுவரை விண்ணப்பங்கள் கிடைக்கப் பெறாத பாடசாலைகள் இருப்பின், அவை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தின் பாடசாலை பரீட்சை பிரிவுக்குமாறு அறிவிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தனிப்பட்ட விண்ணப்பதாரர்களுக்காக, பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் மாதிரி விண்ணப்பம் வழங்கப்பட்டுள்ளது.
பாடசாலையிலிருந்து விலகியிருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு மாத்திரம் தனிப்பட்ட விண்ணப்பத்தை அனுப்ப முடியும் எனவும், அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment