முச்சக்கர வண்டியொன்றும் மோட்டார் சைக்கிளொன்றும் மோதி 7 பேர் படுகாயம் - News View

About Us

About Us

Breaking

Thursday, May 30, 2019

முச்சக்கர வண்டியொன்றும் மோட்டார் சைக்கிளொன்றும் மோதி 7 பேர் படுகாயம்

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முத்துஐயன்கட்டுப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 7 பேர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தனியார் கல்வி நிலையத்தில் கல்வி கற்கும் மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டியொன்றும் மோட்டார் சைக்கிளொன்றும் நேற்று (30) மாலை மோதி விபத்திற்குள்ளானதாக, பொலிஸார் தெரிவித்தனர். 

முத்துஐயன்கட்டு புனித பூமிக்கு திரும்புகின்ற சந்தியில் இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்த 7 பேரும் ஒட்டுசுட்டான் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்

விபத்து இடம்பெற்ற இடத்திற்குச் சென்ற ஒட்டுசுட்டான் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சண்முகம் தவசீலன் - மாங்குளம்

No comments:

Post a Comment