உத்தேச பயங்கரவாத தடுப்புச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 04ம் திகதி கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் எதிர்ப்பில் ஈடுபட உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது.
நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அந்த சங்கத்தின் செயலாளர் ஹரித அளுத்கே இதனைக் கூறியுள்ளார்.
கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து ஜனாதிபதி செயலகத்திற்கு சென்று மகஜர் ஒன்று கையளிக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அரச சேவையை பலப்படுத்துவதற்காக தமது சங்கத்தால் எடுக்க முடியுமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது.
No comments:
Post a Comment