அங்குணுகொலபொலஸ்ஸ - ரன்ன வீதியின் எரமினியாய சந்தியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (01) பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பெண் பாதையை கடக்க முற்பட்ட போது அதி வேகமாக வந்த மோட்டார் வாகனம் ஒன்று மோதியதில் உயிரிழந்துள்ளார். விபத்தை ஏற்படுத்திய நபர் அவ்விடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதை அடுத்து பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.
20 வயதுடைய சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத ஒருவரே இவ்வாறு மோதியதாக தெரிவிக்கப்படுகின்றது.
அங்குணுகொலபொலஸ்ஸ பகுதியை சேர்ந்த 70 வயதுடைய சாந்தனி சில்வா எனும் 70 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் அங்குணுகொலபொலஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment