குடும்பஸ்தரொருவர் கூரிய ஆயுதத்தால் சரமாரியாக வெட்டிக் கொலை - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 5, 2019

குடும்பஸ்தரொருவர் கூரிய ஆயுதத்தால் சரமாரியாக வெட்டிக் கொலை

கிளிநொச்சி - உதயநகர் கிழக்கு பகுதியில் குடும்பஸ்தரொருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று (05) காலை 7.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

கூட்டுறவு காப்புறுதி நிறுவனத்தின் கிளிநொச்சி கிளை முகாமையாளரான காந்தலிங்கம் பிறேமரமணன் (32) என்பரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. 

வவுனியா - வேப்பங்குளத்தை சேர்ந்த குறித்த நபர் ஒரு பிள்ளையின் தந்தை எனவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது. 

அவர் தனது அலுவலக பணிப்பாளருடன் கிளிநொச்சி ஏ9 வீதியில் அமைந்துள்ள அலுவலகத்திற்கு உதயநகர் கிழக்கில் இருந்து புறப்படும்போது உந்துருளியில் வந்த ஒருவர் அவரை சரமாரியாக வெட்டியுள்ளார். 

இதன்போது தலை, கை, கால் உள்ளிட்ட உடம்பின் பல பகுதிகளில் வெட்டுக் காயங்களுக்கு உள்ளான அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் முன் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

கிளிநொச்சி நிருபர் நிபோஜன்

No comments:

Post a Comment