பாரிய தொகை போதைப் பொருள் கொள்ளுப்பிட்டியில் கைப்பற்றப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்ட 05 போதைப் பொருள் கடத்தற்காரர்களும் துபாய்க்கு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்களை கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸாரின் உதவியை பெறுவதற்கு ஆங்கில மொழியில் பகிரங்க பிடியாணையை பிறப்பிக்குமாறு பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாரியளவு போதைப் பொருளை நாட்டிற்கு அனுப்புவதில் தற்போது துபாயில் வசிக்கும் அன்ரனி மைக்கல் மொரில், கொஸ்கொட சுஜி உள்ளிட்ட 05 கடத்தற்காரர்கள் தொடர்புப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
கடந்த மாதம் 24 ஆம் திகதி கொள்ளுப்பிட்டியில் 290 கிலோ கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு கோட்டை பதில் நீதவான், சட்டத்தரணி தீமனி பெத்தேவல முன்னிலையில் சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொள்ளுப்பிட்டியில் 95 கிலோ கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட இரண்டு வௌிநாட்டு பிரஜைகள் உள்ளிட்ட 05 சந்தேகநபர்களும் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment