இத்தாலியில் இருந்து இலங்கைக்கு ஹஷிஷ் போதைப் பொருள் கடத்தல் : மூவர் கைது - News View

About Us

About Us

Breaking

Friday, March 1, 2019

இத்தாலியில் இருந்து இலங்கைக்கு ஹஷிஷ் போதைப் பொருள் கடத்தல் : மூவர் கைது

நீர்கொழும்பு, கொச்சிக்கடை பகுதியில் 600 கிராம் ஹாசிஷ் போதைப் பொருளுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் பேலியகொட வடக்கு குற்றவியல் புலனாய்வு பிரிவினால் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைப்பற்றப்பட்ட ஹாசிஷ் போதைப் பொருள் சுமார் 7.8 மில்லியன் ரூபா பெறுமதியுடயவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாலியில் இருந்து வான்வழி தபால் மூலம் பொதியில் அனுப்பப்பட்ட பொருட்களுக்குள்ளேயே குறித்த போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

கைது செய்யப்பட்டவர்கள் மினுவங்கொட, ஹொரண மற்றும் முனமல்தெனிய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மூன்று சந்தேக நபர்களும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகின்றனர்.

போதைப் பொருளை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட தொலைக்காட்சி பெட்டியொன்றும் 05 கையடக்கத் தொலைபேசிகளும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment