இந்த ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பை தயாரிக்கும் பணிகள் ஆரம்பம் - News View

About Us

About Us

Breaking

Monday, March 11, 2019

இந்த ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பை தயாரிக்கும் பணிகள் ஆரம்பம்

இந்த ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பை தயாரிக்கும் ஆரம்ப பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இம்மாதம் கிராம உத்தியோகத்தர்களின் அறிவூட்டும் நிகழ்வை அடுத்து வாக்காளர்களின் வீடுகளுக்கு விண்ணப்பப் படிவங்களை அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ரஷிக பீரிஸ் தெரிவித்தார்.

இம்முறை வாக்காளர்களின் பெயர்களை இடாப்பில் இணைத்துக் கொள்ளும் நடைமுறை கடந்த கால நடைமுறைகளிலும் வித்தியாசமானது. இதனடிப்படையில் வீட்டில் வசிக்கும் புதிய நபர்களுடைய விபரங்களை வீட்டு உரிமையாளர் அல்லது தலைமை நிர்வாகி விண்ணப்பப் படிவத்தில் பதிய வேண்டும் என்பதே நடைமுறையாகும். 

அத்துடன் 15 இற்கும் 18 வயதிற்கும் இடைப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அங்கவீன குறைபாடு உடையவர்களின் விபரங்களும் இதில் உள்ளடக்கப்பட வேண்டும்.

No comments:

Post a Comment