ரயில் சேவையில் இந்த வருடத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி - News View

About Us

About Us

Breaking

Monday, March 11, 2019

ரயில் சேவையில் இந்த வருடத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி

ரயில் சேவையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி இந்த வருடத்தில் காண முடியும் என்று ரெயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரயில் கட்டணம் 15 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டமையால் ரயில்வே திணைக்களத்தின் மாதாந்த வருமானம் 25 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது என்று திணைக்களத்தின் உதவி வர்த்தகப் பிரிவு அதிகாரி என்.ஜி.இந்திகொல்ல தெரிவித்துள்ளார். 

இதற்கமைய, 47 தசம் 53 மில்லியன் ரூபா மேலதிக வருமானமாகப் பெறப்பட்டுள்ளது. திணைக்களத்தின் வருமானம் 67 தசம் 68 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.

வீதிகளில் காணப்படும் நெரிசல் காரணமாக ரயிலில் பயணிப்போரின் எண்ணிக்கை 25 சதவீதமாக அதிகரித்துள்ளது. ரயில் சேவையை விரிவுபடுத்துவதற்காக புதிதாக 160 ரயில் பெட்டிகளும், 6 எஞ்சின்களையும் கொள்வனவு செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. 

பொருட்களை ஏற்றிச் செல்வதற்கு கூடுதலான இடவசதிகளை வழங்குவதற்காக புதிய எஞ்சின்கள் பயன்படுத்தப்பட உள்ளன. 

இந்தியாவிலிருந்து கொண்டுவருவதற்கு திட்டமிடப்பட்டுள்ள 6 பெட்டிகளுக்கு மேலதிகமாக மலையக ரயில் பாதையின் சேவைகளுக்காக மேலும் 7 பயணிகள் பெட்டிகள் சீனாவிலிருந்து கொண்டுவரப்பட உள்ளன.

No comments:

Post a Comment