அவயவங்கள் மாற்று சிகிச்சை, புதிய முப்பரிமாண தொழில்நுட்பம் அடுத்த மாதம் முதல் அறிமுகம் - அமைச்சர் ராஜித சேனாரத்ன - News View

About Us

About Us

Breaking

Monday, March 4, 2019

அவயவங்கள் மாற்று சிகிச்சை, புதிய முப்பரிமாண தொழில்நுட்பம் அடுத்த மாதம் முதல் அறிமுகம் - அமைச்சர் ராஜித சேனாரத்ன

அவயவங்கள் மாற்றுச் சிகிச்சை செய்வதற்கு இலகுவாக புதிய முப்பரிமாண தொழில்நுட்பத்தைக் கொண்ட சிகிச்சைகள் அடுத்த மாதம் முதல் இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 

இதற்கிணங்க அவசர விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக சிகிச்சைகளை மேற்கொள்ளும் முதலாவது கட்ட செயற்பாடுகள் அடுத்த மாதம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். 

முப்பரிமாண தொழில்நுட்பத்துடன் சிகிச்சைகளை மேற்கொள்வதற்கான உபகரணங்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யவுள்ளதாகவும் அதுபோன்ற உபகரணங்களை இலங்கையில் உற்பத்தி செய்வதற்கு உத்தேசித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். 

“மெடிகெயார் 2019 தேசிய சுகாதார கண்காட்சி” கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. அக்கண்காட்சியை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து உரையாற்றிய அவர், திடீர் விபத்துக்குள்ளாகும் நோயாளிகளுக்கு கால் அல்லது தலைகளில் காயங்கள் ஏற்பட்டிருந்தால் அதற்கு விசேடமான சிகிச்சைகள் மூலம் அந்த அவயவங்களை முன்னர் இருந்தது போல் அமைப்பதற்கு முடியும் என்றும் இத்தகைய சிகிச்சைகள் மருத்துவர்களுக்கு வசதியாக அமையும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். 

மருத்துவத்துறையில் புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்வதுடன் இத்தகைய கண்காட்சிகள் மூலம் அதனை மக்களுக்கு தெளிவுபடுத்த முடியும் என்றும் தெரிவித்தார். 

No comments:

Post a Comment