கிழக்கு மாகாணத்தில் நோயாளிகள் சிரமம் இன்றி தமது மருத்துவ தேவைகளை பெறுவதற்குறிய வழிவகைகளை மேற்கொண்டு வருவதாகவும் அதில் ஏதாவது தடைகள் ஏற்பட்டால் உடனடியாக எனது கவனத்திற்கு கொண்டுவருமாறு கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றும் அரச வைத்திய அதிகாரிகள் எதிர் நோக்கு பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் கிழக்கு மாகாண ஆளுநருடனான உயர்மட்ட கூட்டம் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இடம் பெற்றது.
கிழக்கு மாகாண அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் டொக்டர் ஏ.லதாகரன் தலைமையிலான வைத்தியர்கள் குழுவினர் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வை சந்தித்து தாம் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக எடுத்துக் கூறியதையடுத்து அதனை ஏற்றுக்கொண்ட ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் உடனடியாக அதற்குப் பொறுப்பான உயர் அதிகாரிகளுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடனடியாக அமுலாகும் வகையில் இவ்வைத்தியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கையினை மேற்கொண்டார்.
கிழக்கு மாகாண அரச வைத்திய அதிகாரிகளின் தங்குமிடம் போக்குவரத்து போன்ற அத்திய அவசியத்தேவைகள் தொடர்பான கோரிக்கைகளை அவசரமாக நிவர்த்திக்கும் வகையில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுக்கும் கிழக்கு மாகாண சுகாதார திணைக்களத்திற்கும் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கட்டளை பிறப்பித்துள்ளதுடன் அது தொடர்பான அறிக்கையினை அவசரமாக சமர்ப்பிக்குமாறும் இதற்கு பொறுப்பான அதிகாரிகளிடம் ஆளுநர் வேண்டியுள்ளார்.
No comments:
Post a Comment