பலாங்கொடை பெலிஹுல் ஓயா ஆற்றின் ஆபத்தான குகையை மூடத் தீர்மானம் - News View

About Us

About Us

Breaking

Monday, March 4, 2019

பலாங்கொடை பெலிஹுல் ஓயா ஆற்றின் ஆபத்தான குகையை மூடத் தீர்மானம்

பலாங்கொடை பெலிஹுல் ஓயா ஆற்றின் ஆபத்தான குகையை மூடி விட இம்புல்பே பிரதேச சபை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக இம்புல்பே பிரதேச சபைத் தலைவர் ஸ்ரீலால் செனரத் தெரிவித்தார்.

இதுவரை மேற்படி ஆற்றின் ஆபத்தான குழியில் நீராடச் சென்றோரில் 18 பேர் உயிரிழந்தனர். எனவே 19 ஆவது உயிர்ப்பலி ஏற்படுவதற்கு முன்னர் பெலிஹுல் ஓயா ஆற்றின் ஆபத்தான குகையை மூடி விட தீர்மானித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்ததாவது இவ்விடத்தில் நீராடுவதற்காக அதிகளவான உல்லாசப் பயணிகள் வருகை தருகின்றனர். இந்த ஆற்றில் மிகவும் ஆபத்தான சூழ்நிலை குறித்து அறிவித்தல் பலகைகளை காட்சிப்படுத்தியுள்ளோம். 

எனினும் நீராட வரும் உல்லாசப் பயணிகள் இவ்விடயத்தில் அக்கறை காட்டுவதில்லை . இதனால் இந்த அறிவித்தல் பலகை ஒரு பயனற்ற விடயம் என்பதை நான் உணர்கின்றேன். அறிவுறுத்தலைக் காட்சிப்படுத்துவதை விட ஆபத்தான நிலைமையில் உள்ள நீர்க் குழியை மூடி விடுவதே மிகவும் பொருத்தமான நடவடிக்கையாகும். 

ஆகவே இதற்கான நடவடிக்கையை இம்புல்பே பிரதேச சபை, பலாங்கொடை பொலிஸ் நிலையத்தின் சுற்றாடல் பாதுகாப்பு பிரிவு இம்புல்பே பொதுச் சுகாதார பிரிவு ஆகியன கூட்டாக முன்னெடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment