வரவு செலவுத் திட்டத்தில் நாட்டின் பொருளாதாரம் பற்றி எவ்வித தெளிவான விளக்கமும் முன்வைக்கப்படவில்லையென்றும் இதன் மூலம் மக்கள் மறைமுகமாக பல பொருட்களுக்கு வரி செலுத்த நேரிடுமென்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
கொழும்பு டார்லி வீதியிலுள்ள சுதந்திரக் கட்சி அலுவலகத்தில் நேற்று காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இது ஒரு வேளைக்கான வரவு செலவுத் திட்டமெனவும், பாரிய திட்டங்களுக்காக சிறிய தொகை பணம் ஒதுக்கப்பட்டுள்ளமை மற்றும் சிறிய அளவிலான அபிவிருத்தி என்பன அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாகவும் கூறினார்.
மன ஆறுதலுக்காக தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்படுமென கூறப்பட்டுள்ளதே தவிர எவ்வளவால் அதிகரிக்கப்படுமென நிதி அமைச்சர் கூற தவறிவிட்டார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment