துபாயில் கைது செய்யப்பட்டுள்ள திட்டமிட்டு குற்றச்செயல்களில் ஈடுபடும் கஞ்சிப்பானை இம்ரானுக்கு நெருக்கமான முக்கிய நபர் ஒருவர் ஐஸ் போதைப் பொருளுடன் கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் திட்டமிட்ட குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் படி நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் 2080 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருளும் வாள் ஒன்றும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் நீண்ட காலமாக ஐஸ் வகைப் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவது தெரிய வந்துள்ளதாக பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக கொட்டாஞ்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் நீதவான் முன்னிலையில் சந்தேகநபர் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment