மாலைத்தீவு கரையோர பாதுகாப்பு பிரிவினரால் 24 இலங்கை மீனவர்கள் கைது - News View

About Us

About Us

Breaking

Saturday, March 2, 2019

மாலைத்தீவு கரையோர பாதுகாப்பு பிரிவினரால் 24 இலங்கை மீனவர்கள் கைது

கடல் எல்லையை மீறிய குற்றச்சாட்டில் 24 இலங்கை மீனவர்கள் மாலைத்தீவு கடற்பிராந்தியத்தில் அந்நாட்டு கரையோர பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிலாபம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. மீனவர்களின் நான்கு படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்களில் 18 வயதிற்கும் குறைவான ஒருவரும் அடங்குவதுடன், குறித்த இளைஞர் எந்த நோக்கத்துடன் மீனவர்களுடன் இணைந்தார் என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் தேடுதல் பிரிவின் பணிப்பாளர் கல்யாணி ஹேவாபத்திரண தெரிவித்தார்.

மீனவர்களை விடுவிப்பது தொடர்பில் மாலைத்தீவு அரசாங்கத்திடம் கலந்துரையாடியுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் குறிப்பிட்டது.

No comments:

Post a Comment