சிங்கள மொழிப் பாடகரான அமல் பெரேரா, நதீமால் பெரேரா உள்ளிட்டோரின் விளக்கமறியல் நீடிப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, March 1, 2019

சிங்கள மொழிப் பாடகரான அமல் பெரேரா, நதீமால் பெரேரா உள்ளிட்டோரின் விளக்கமறியல் நீடிப்பு

துபாயில் கைது செய்யப்பட்டுள்ள சிங்கள மொழிப் பாடகரான அமல் பெரேரா மற்றும் அவரின் மகன் நதீமால் பெரேரா உள்ளிட்ட சந்தேகநபர்களின் விளக்கமறியல் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. துபாய் நீதிமன்றத்தில் அவர்கள் நேற்று (28) ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அமல் பெரேரா மற்றும் நதீமால் பெரேரா ஆகியோர் போதைப் பொருள் பயன்படுத்தியுள்ளனரா என்பதை உறுதிப்படுத்துவதற்காக அந்நாட்டு பொலிஸாரினால் கோரப்பட்டுள்ள அறிக்கை இதுவரை கிடைக்கவில்லை என அவர்கள் சார்பில் ஆஜராகியுள்ள சட்டத்தரணி சாப்திக வெல்லப்பிலி தெரிவித்தார்.

குறித்த அறிக்கையினூடாக இவர்கள் இருவரும் போதைப் பொருள் பயன்படுத்தியுள்ளமை உறுதி செய்யப்படுமாயின் அந்நாட்டு சட்டங்களுக்கு அமைய 3 வருடங்கள் சிறைத் தண்டனை அனுபவிப்பதுடன், தலா 10,000 திர்ஹாம் அபராதம் செலுத்த வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

அமல் பெரேரா மற்றும் நதீமால் பெரேரா உள்ளிட்ட சந்தேகநபர்கள் கடந்த மாதம் 05 ஆம் திகதி துபாயில் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் பிரபல போதைப் பொருள் கடத்தற்காரரான மாகந்துரே மதுஷ் உள்ளிட்ட குழுவினர் அடங்குவர்.

No comments:

Post a Comment