நாவலப்பிட்டியில் ரயிலில் மோதுண்டு பாடசாலை மாணவர்கள் இருவர் பலி - News View

About Us

About Us

Breaking

Saturday, March 2, 2019

நாவலப்பிட்டியில் ரயிலில் மோதுண்டு பாடசாலை மாணவர்கள் இருவர் பலி

நாவலப்பிட்டியில் ரயிலில் மோதுண்டு பாடசாலை மாணவரும் மாணவியும் உயிரிழந்துள்ளனர். ரயில் மார்க்கத்தில் நடந்து செல்லும் போது இவர்கள் ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இவர்கள் இருவருக்கும் முன்பாக மற்றுமொரு மாணவி கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்தியவாறு ரயில் மார்க்கத்தில் நடந்து சென்றுள்ளார்.

ரயில் அருகில் வருவதை அவதானித்த மாணவர் தன்னருகில் நடந்து கொண்டிருந்த மாணவியை மார்க்கத்திலிருந்து விலக்கித் தள்ளிவிட்டு, முன்னாள் சென்ற மாணவியைக் காப்பாற்ற முயன்ற போதே இவர்கள் இந்த அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளனர்.

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணித்த ரயிலிலேயே இவர்கள் மோதுண்டுள்ளனர்.

இந்த விபத்தில் 16 வயதான ஹர்ஷ குமார எனும் மாணவரும் 15 வயதான பியூமி பாக்யா செவ்வந்தி எனும் மாணவியும் உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் இம்புல்பிட்டிய மற்றும் தெகித ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இவர்களின் சடலங்கள் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment