கொழும்பின் சில பகுதிகளில் இன்று இரவு 9 மணி முதல் நாளை (03) மாலை 3 மணி வரை நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
கொழும்பு - 13, 14, 15 ஆகிய பகுதிகளில் நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
இந்தக் காலப்பகுதியில் கொழும்பு கோட்டை மற்றும் புறக்கோட்டை ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் முன்னெடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குடிநீர் விநியோகத் திட்டம் மற்றும் கழிவு நீர் செயற்றிட்டம் ஆகியவற்றில் முன்னெடுக்கப்படும் திருத்தப்பணிகள் காரணமாக நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment