வயல் நிலங்களில் இயந்திரங்களின் மூலம் இரத்தினக்கல் அகழ கமத்தொழில் சேவைகள் திணைக்களம் மீண்டும் அனுமதி வழங்கியுள்ளது.
இரத்தினபுரி மாவட்ட இரத்தினக்கல் தொழில் துறையினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னர் மேற்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பபட்டுள்ளது.
இதன் மூலம் ஏற்கனவே வயல் நிலங்களில் இரத்தினக்கல் அகழ்வை தடை செய்ய கமத்தொழில் சேவைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டிருந்த 2018/24 இலக்க சுற்று நிருபம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே இதே 2018/24 இலக்க சுற்று நிருபத்தை திருத்தத்துடன் அனுப்பி வைத்துள்ள கமத்தொழில் சேவைகள் திணைக்களம் வயல் நிலங்களில் இயந்திரங்கள் மூலம் இரத்தினக்கல் வயல் நிலங்களுக்கு பாதிப்பு ஏற்பட மாட்டாது என்று இரத்தினக்கல் அதிகார சபையின் களப் பரிசீலனை மூலமான அறிக்கை சமர்ப்பிக்கப்படுமாயின் குறித்த வயல் நிலத்தில் இயந்திரங்கள் மூலம் இரத்தினக்கல் அகழ்வதற்கான அனுமதி பத்திரத்தை வழங்க முடியும் என இரத்தினக்கல் அதிகார சபைக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
எனினும் விவசாய கமத்தொழில் அமைப்புக்கள் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு அமைப்புகள் இயந்திரங்கள் மூலம் வயல் வெளிகளில், தரிசு நிலங்களில் ஆற்றங்கரைகளில் இரத்தினக்கல் அகழ்வதை பரவலாக எதிர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment