அனைத்துக் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடாத்துவதற்கு எதிர்பார்த்துள்ளேன் - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 6, 2019

அனைத்துக் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடாத்துவதற்கு எதிர்பார்த்துள்ளேன்

நாட்டின் முக்கிய பிரச்சினை தொடர்சில் அனைத்துக் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தாம் எதிர்பார்த்துள்ளதாக எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். 

மக்கள் விடுதலை முன்னணியுடனான பேச்சுவார்த்தை தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிரணியில் உள்ள கட்சித் தலைவர்களுடன் நேற்று முன்தினம் மாலை பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றது. அத்துடன் மக்கள் விடுதலை முன்னணியுடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன்.

எதிர்க் கட்சித் தலைவர் என்ற வகையில் எதிர்க் கட்சியிலுள்ள சகல கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்துவது தமது பொறுப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் வேண்டுகோளுக்கிணங்க அக்கட்சியுடன் பேச்சுவார்த்தை இடம்பெற்றதாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட ஏனைய எதிர்க் கட்சிகள் வேண்டுகோள் விடுத்தால் நாட்டின் முக்கியமான பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடத்த தயாராகவுள்ளேன்.

மக்கள் விடுதலை முன்னணியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் மக்கள் ஐக்கிய முன்னணி தலைவர் தினேஷ் குணவர்தன் எம்.பி., டலஸ் அழகப்பெரும எம்.பி. ஆகியோர் பங்கேற்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

No comments:

Post a Comment