கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இரண்டாயிரம் மில்லியன் ரூபா செலவில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு - News View

About Us

Add+Banner

Breaking

  

Sunday, March 31, 2019

demo-image

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இரண்டாயிரம் மில்லியன் ரூபா செலவில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு

55693001_2739722292709796_7353739216326492160_n
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் 02 ஆயிரம் மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவின் 06 மாடி கட்டிடத்திற்கான நிர்மாணப் பணிகள் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டன.

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எப்.றஹ்மான் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் சுகாதார போசணை மற்றும் சுதேச வைத்தியத்துறை இராஜாங்க அமைச்சர் எம்.சி.பைசல் காசீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிர்மாணப் பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் வைத்தியர்கள், தாதியர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
53499922_2739722936043065_7485550504215314432_n
கல்முனை மற்றும் கரையோரப் பிரதேச மக்கள் இவ்வைத்தியசாலை ஊடாக நன்மையடைய வேண்டும் என்பதற்காக சுகாதார போசணை மற்றும் சுதேச வைத்தியத்துறை இராஜாங்க அமைச்சர் எம்.சீ.பைசல் காசீம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.

இதன்போது இவ்வாறான பாரிய அபிவிருத்தி திட்டம் விரைவாக நிறைவு செய்யப்பட வேண்டும் என சம்மந்தப்பட்ட அதிகாரிகாரிகளுக்கு ஆலோசனையும் வழங்கினார்.
55916134_2739722392709786_9133182804585086976_n
55618353_2739722349376457_3596654361549209600_n
55807270_2739722669376425_3926240608426917888_n
54462830_2739723036043055_4324996685131415552_n
56476732_2739722439376448_6978955576894029824_n
56262428_2739722622709763_5064565082562756608_n
55575687_2739722786043080_5477912168194113536_n
55882254_2739722726043086_73989470327668736_n

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *