பங்களாதேஷ் கடற்படை கப்பல் ஒன்று நான்கு நாள் விஜயம் மெற்கொண்டு கொழும்பு துறைமுகத்திற்கு இன்று (03) வருகை தந்துள்ளது.
'தலேஸ்வரி' என்றழைக்கப்படும் இக்கப்பலுக்கு இலங்கை கடற்படையினரால் வரவேற்பளிக்கப்பட்டது.
இந்த நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின்போது, கப்பல் குழுவினர் நாட்டிலுள்ள பிரபலமான இடங்களை பார்வையிடுவதற்கும் விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்வுகளில் பங்குகொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.
'தலேஸ்வரி' கப்பலானது 1920 டன் நிறையுடைய 81 மீட்டர் நீளமான கப்பல் ஆகும். இக் கப்பல் பங்களாதேஷின் 183 ஆவது படைக் குழுவினால் நிர்வகிக்கப்படுகிறது. இக் கப்பல் எதிர்வரும் புதன்கிழமை (06) தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பவுள்ளது.
No comments:
Post a Comment