வைத்தியசாலையில் தீ ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் அங்கிருந்த 63 இலட்சம் ரூபா பணம் கொள்ளை - News View

About Us

About Us

Breaking

Sunday, March 3, 2019

வைத்தியசாலையில் தீ ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் அங்கிருந்த 63 இலட்சம் ரூபா பணம் கொள்ளை

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் நிர்வாகக் கட்டடத் தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்தின்போது, அங்கிருந்த 63 இலட்சம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

அடையாளம் தெரியாத நபரொருவர், வைத்தியசாலையின் பணப் பெட்டியை உடைத்து பணத்தை கொள்ளையிட்டுள்ளதாக, வைத்தியசாலையின் பணிப்பாளர், டொக்டர் துலான் சமரவீர தெரிவித்துள்ளார்.

அத்துடன், அதிலிருந்த சில ஆவணங்களையும் சந்தேகநபர் தீமூட்டி கொளுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இன்று அதிகாலை 4 மணியளவில் இந்த சம்பவம் தொடர்பில் தமக்கு தெரியவந்ததாகவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment