மஹியங்கனையில் துப்பாக்கிப் பாகங்களுடன் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 5, 2019

மஹியங்கனையில் துப்பாக்கிப் பாகங்களுடன் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது

மஹியங்கனை - ரிதிமாலியத்த பகுதியில் துப்பாக்கிப் பாகங்களைத் தம்வசம் வைத்திருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, சந்தேகநபர் வசமிருந்த தன்னியக்க துப்பாக்கிக்கு பொருத்தப்படும் வௌிநாட்டுத் தயாரிப்பிலான 273 ரவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கு மேலதிகமாக விமானங்களைத் தாக்குவதற்குப் பயன்படுத்தப்படும் தன்னியக்க துப்பாக்கிகளுக்கு பொருத்தும் 73 ரவைகள், துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 2 இரும்புப் பாகங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மன்னார் - பெரியமடு இராணுவத்தளத்துடன் இணைந்த வகையில் கடமைபுரியும் 36 வயதுடைய சிப்பாய் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட குறித்த சிப்பாய், இன்று (06) மஹியங்களை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.

No comments:

Post a Comment