350 மில்லியன் ரூபாய் செலவில் ஓட்டமாவடியில் முதன்முறையாக நான்கு வழிப்பாதை அமைச்சர் அமீர் அலி தெரிவிப்பு - News View

About Us

Add+Banner

Friday, March 1, 2019

demo-image

350 மில்லியன் ரூபாய் செலவில் ஓட்டமாவடியில் முதன்முறையாக நான்கு வழிப்பாதை அமைச்சர் அமீர் அலி தெரிவிப்பு

WhatsApp+Image+2019-03-01+at+11.12.02+PM
எஸ்.எம்.எம்.முர்ஷித்
ஓட்டமாவடியில் முதன்முறையாக நான்கு வழிப்பாதை 350 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளதாக விவசாய நீர்ப்பாசன கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் 2019ம் ஆண்டுக்கான பிரதேச அபிவிருத்தி குழுவின் முதலாவது கூட்டம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இராஜாங்க அமைச்சரின் தலைமையில் இடம் பெற்ற போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

நாலவடி திருக்கொண்டயாமடு தொடக்கம் ஓட்டமாவடி பாலம் வரை நான்கு வழிப் பாதையாக மாற்றியமைக்கப்படவுள்ளது. இதற்கான முதலாம் கட்டம், இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று முடிந்துள்ளன. இந்த வருட நடுப்பகுதியில் இதற்கான வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளது. 
WhatsApp+Image+2019-03-01+at+11.12.04+PM+%25281%2529
எனவே இப்பிரதேசத்தில் உள்ள நிறுவனங்கள், காணி உரிமையாளர்கள், காணியை பிடித்துள்ளவர்கள் உடனே விட்டுக் கொடுத்தால் இலகுவாக இருக்கும் எனவும், இந்த வருடத்தில் திட்டம் ஆரம்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார். 

இதன்போது சுகாதாரம், மீன்பிடி, விவசாயம், நீர்ப்பாசனம், கல்வி, வீதி அபிவிருத்தி, கால்நடை, சுயதொழில் ஊக்குவிப்பு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இதில் பிரதேச செயலாளர் எஸ்.முஸம்மில், ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி.அஸ்மி, ஓட்டமாவடி பிரதேச சபை செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச திணைக்களங்களின் பிரதி நிதிகளும் கலந்து கொண்டனர்.
WhatsApp+Image+2019-03-01+at+11.12.03+PM
WhatsApp+Image+2019-03-01+at+11.12.01+PM
WhatsApp+Image+2019-03-01+at+11.11.59+PM
WhatsApp+Image+2019-03-01+at+11.12.04+PM

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *