எச்.எம்.எம்.பர்ஸான்
ஓட்டமாவடி - நாவலடி மர்கஸ் அந்நூர் அரபுக் கல்லூரியின் இல்லங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வு எதிர்வரும் 3 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு கல்லூரியின் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
கல்லூரியின் அதிபர் ஏ.ஹபீப் காஸிமி அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி கலந்து கொள்ளவுள்ளார்.
கல்லூரியின் வரலாற்றில் முதன்முறையாக இடம்பெற்றுக் கொண்டிருக்கும் இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வில் மாணவர்களின் சிறப்பு நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment