வடக்கில் அதிகரிக்கும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த பொலிஸாரை இணைக்க முடிவு இதற்காக தமிழ் இளைஞர்கள் யுவதிகள் முன்வர வேண்டும் - News View

About Us

About Us

Breaking

Thursday, February 28, 2019

வடக்கில் அதிகரிக்கும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த பொலிஸாரை இணைக்க முடிவு இதற்காக தமிழ் இளைஞர்கள் யுவதிகள் முன்வர வேண்டும்

வடக்கில் அதிகரிக்கும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த 850 தமிழ் பொலிஸார் புதிதாக இணைக்கப்படவுள்ளனர். இதற்காக தமிழ் இளைஞர்கள் யுவதிகள் முன்வந்து இணைய வேண்டும் என வடக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கணேசநாதன் தெரிவித்தார்.

யாழ்.மாவட்டச் செயலகத்தில் நேற்று (வியாழக்கிழமை) மாவட்ட சிவில் பாதுகாப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில், “வடக்கு மாகாணத்தில் புதிதாக 850 தமிழ் பொலிஸார்கள் இணைக்கப்படவுள்ளனர். இதற்காக 18 வயதிலிருந்து 28 வயதுக்கு இடைப்பட்ட 5 அடி 4 அங்குலம் உயரமுடைய இளைஞர், யுவதிகள் முன்வரவேண்டும்.

இலங்கையின் சனத்தொகை 2 கோடியே 30 இலட்சமாகும். இவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வெறுமனே 85 ஆயிரம் பொலிஸாரும், 10 ஆயிரம் விசேட அதிரடிப் படையினரும் உள்ளனர்.

இதனால் மேலதிக பொலிஸார் எமக்குத் தேவையாக உள்ளார்கள். நாளை வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனுடன் இணைந்து பொலிஸ்மா அதிபரை நான் சந்திக்கவுள்ளேன். அவரிடம் இவ்விடயம் குறித்து பேசவுள்ளோம்” என்றார்.

No comments:

Post a Comment