சர்வதேச பொறிமுறை குறித்து கூட்டமைப்பு வலியுறுத்த வேண்டும் - News View

About Us

About Us

Breaking

Thursday, February 28, 2019

சர்வதேச பொறிமுறை குறித்து கூட்டமைப்பு வலியுறுத்த வேண்டும்

சர்வதேச பொறிமுறை தொடர்பாக காலங்களை வழங்காமல் அதனை நிறைவேற்றுமாறு சர்வதேசத்தினை தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்த வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்புகளின் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.சிவயோகநாதன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு சர்வதேச பொறிமுறை ஒன்றினூடாக பொறுப்புக்கூறள் கடமைப்பாட்டினை உறுதி செய்வதற்கு சர்வதேசம் முன்வரவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “இலங்கை அரசாங்கமானது ஜெனீவாவில் பொறுப்புக் கூற வேண்டிய நிர்ப்பந்தத்தில் நிற்கின்றது.

சர்வதேசம் இனியும் காலங்களை வழங்காமல் சரியான பொறிமுறையின் கீழ் இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூறுவதற்கு இட்டுச்செல்ல வேண்டும்.

700 நாட்களை தாண்டியும் பல்வேறு துன்பங்களையும் தாங்கியவாறு காணாமல்போனவர்களின் உறவினர்கள் போராடி வருகின்றனர். அதேபோன்று கேப்பாபுலவு மக்களும் தமது காணி மீட்புக்காக கடந்த இரண்டு வருடமாக போராடி வருகின்றனர்.

நிலைமாறுகால நீதி பொறிமுறையின் கீழ் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு இன்னும் அமைக்கப்படவில்லை. அரசியல்யாப்பு ஒன்று உருவாக்கப்பட்டது ஆனால் அவை நிறைவேற்றப்படுவதற்கான சந்தர்ப்பம் குறைவாகவுள்ளது.

யுத்ததிற்கு முன்னரும் பல ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்டுள்ளன, வாக்குறுதிகள் வழங்கப்பட்டு ஏமாற்றப்பட்டுள்ளன இது தொடர்கதையாகவே செல்கிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment