இலங்கை சமாதான படை வீரர்களின் ஒழுக்க மிகுந்த பயிற்சி மற்றும் நம்பிக்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சமாதான படை நடவடிக்கைகளின் கட்டளை தளபதி லெப்டினன் ஜெனரல் டெனிஸ் கிலிஸ்போர் பாராட்டியுள்ளார்
மாலி நாட்டில் ஐக்கிய நாடுகளின் சமாதான படை கடமைகளில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்த இலங்கை இராணுவ வீரர் இருவரின் பூத உடல்களை இலங்கைக்கு கொண்டு வந்த இவர் இராணுவ தலைமையகத்தில் இராணுவ தளபதி லெப்னென் ஜெனரல் மஹேஸ் சேனநாயக்கவை சந்தித்த வேளையில் இந்த விடயத்தை தெரிவித்தார்.
இலங்கை இராணுவ வீரர்களின் துரதிஷ்டமான மரணத்தையடுத்து ஜக்கிய நாடுகள் சபை மற்றும் சமாதான நடவடிக்கை தலைமையகத்தினாலும் கட்டளை தளபதியினாலும் முன்னெடுக்கப்பட்ட பணிகள் தொடர்பில் இராணுவ தளபதி அவர்களுக்கு நன்றியை தெரிவித்தார்.
உயிரிழந்த இராணுவ வீரர்கள் இருவரின் மரணம் இராணுவ வரலாற்றில் சமாதான படை அதிகாரிகளாக இடம்பெறுவார்கள் என்றும் இராணுவ தளபதி தெரிவித்தார்.
No comments:
Post a Comment