கிரிக்கெட்டில் டெஸ்ட் வடிவம் இறப்பை எதிர்நோக்கி வருவதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, February 8, 2019

கிரிக்கெட்டில் டெஸ்ட் வடிவம் இறப்பை எதிர்நோக்கி வருவதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவிப்பு

கிரிக்கெட்டில் டெஸ்ட் வடிவம் இறப்பை எதிர்நோக்கி வருவதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.

இந்த வடிவத்தை பாதுகாப்பதற்காக உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் அறிமுகம் செய்யப்பட்டதாக சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவர் ஷஷாங் மனோகர் தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷிற்கான நல்லெண்ண விஜயத்தில் பிரதமர் ஷேக் ஹசினாவை சந்தித்த பின் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவர் ஷஷாங் மனோகர் இதனை தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ரி-ருவென்ரி போட்டிகள் கூடுதலான ஆர்வத்தை ஈட்டி வருகின்றன. தொலைக்காட்சியிலும் ரி-ருவென்ரி வடிவம் புகழ் பெற்றுள்ளது என ஐசிசியின் தலைவர் குறிப்பிட்டார். 

டெஸ்ட் சம்பியன்ஷிப் சுற்றுத் தொடருக்கு 2017ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் அனுமதி கிடைத்திருந்தது. இவ்வாண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ண சுற்றுத் தொடரை அடுத்து டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டிகள் தொடங்கும். இந்தப் போட்டிகள் 2021ம் ஆண்டு வரை நடைபெறவுள்ளன.

No comments:

Post a Comment