2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் தொடர்பில் பொது மக்களின் கருத்துக்கள் ஆலோசனைகளை பெற்றுக் கொள்வதற்கான இறுதிநாள் எதிர்வரும் திங்கட்கிழமையுடன் நிறைவடைவதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இதுவரையில் பல்வேறு தரப்பினர் இதற்காக அமைச்சிக்கு கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கியுள்ளன. தொழிற்சங்கங்கள் அரசு மற்றும் அரசசார்பற்ற அமைப்புக்கள் தனியார் வரவுசெலவு திட்டத்திற்காக கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை சமர்பிக்க முடியும்.
பணிப்பாளர் நாயகம் வர்த்தகம் மற்றும் முதலீட்டு கொள்கை திணைக்களம் செயலாளர் அலுவலகம் கொழும்பு 1 என்ற முகவரிக்கு தபால் மூலம் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அனுப்பி வைக்கமுடியும்.
0112484962 அல்லது 0112484830 என்ற தொலைநகல் மூலமாகவும், கருத்துக்களையும் ஆலோசனைகளையம் சமர்பிக்க முடியும். நிதியமைச்சின் இணையத்தளத்தின் மூலமாகவும் இவற்றை சமர்பிக்க முடியும்.
No comments:
Post a Comment