தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் (NAITA) மூலமாக நாட்டிலுள்ள 25 மாவட்டங்களில் நடத்தப்பட்டுவரும் தகவல் தொழில் நுட்ப (ICT) பயிற்சி நெறிகளை வழங்கும் போதனாசிரியர்களுடனான சந்திப்பு நேற்று தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் தலைவரும், கிழக்கு மாகாண முன்னாள் முதல்வருமான நஸிர் அஹமட்டுடன் நடைபெற்றது.
இச்சந்திப்பில் பகுதி நேர போதானாசிரியர்களாக கடமையாற்றும் அவர்கள் தாம் இதுவரை காலமும் எதிர்கொண்டும் வரும் முக்கிய குறைபாடுகள் குறித்து தலைவரின் கவனத்துக்கு முன்வைத்தனர்.
குறிப்பாக பல வருடங்களாகப் பணி செய்தும் இதுவரையில் பணி நிரந்தரம் ஆக்கப்படாமை, மருத்துவ விடுகை கூட பெற முடியாமை கடந்த இரண்டு மாத காலமாகச் சம்பளம் பெறமுடியாமல் இருக்கின்றமை, போதானாசிரியர்கள் தொழில்சார் பயிற்சிகளை பெறமுடியாமை மற்றும் பாடசாலை கல்வியில் கல்வி பொதுத் தராதர சாதாரண தரத்தில் சித்தி அடையாத மாணவர்கள 13 வருட உத்தரவாதப்படுத்தப்படும் கல்வி திட்டத்தின் கீழ் நைற்ற மூலமாகப் வழங்கப்படும் ஆளுமை விருத்தி பயிற்சி நெறிக்களுக்காக சேர்த்துக் கொள்ளப்படுவதில் பல இடர்பாடுகளைச் சந்திக்கின்றனர் போன்ற விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டது.
முக்கியமாக இப்பயிற்சி நெறிகளில் சேருவதற்காக விண்ணப்பங்கள் கோரப்படும்போது 500க்கும் அதிக மாணவர்கள் விண்ணப்பித்தாலும் 20 பேருக்கே இடமளிக்கப்படுகின்றது. அத்துடன் இடப்பிரச்சினை மற்றும் உபகரணங்கள் இல்லாமை குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. இதனை கருத்திற் கொண்ட தலைவர் நசீர் அஹமட் இவற்றுக்கான நடவடிக்கைகள் உடன் எடுக்கப்படும் என தெரிவித்தார்.
No comments:
Post a Comment