2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட 2ம் வாசிப்பு மார்ச் 5ம் திகதி - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 27, 2019

2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட 2ம் வாசிப்பு மார்ச் 5ம் திகதி

2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட முன்மொழிவுகளை உள்ளடக்கிய வரவு செலவு திட்ட உரை வரவு செலவு திட்ட 2ஆவது வாசிப்பு 2019ஆம் ஆண்டு மார்ச் 5ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. 

நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளது. இது தொடர்பில் நேற்று அமைச்சரவைக்கு சமர்பிக்கப்பட்ட பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. 

இதற்கமைவாக வரவு செலவு திட்டத்தின் 2ஆம் வாசிப்பு மீதான விவாதம் 2019.03.06 தொடக்கம் 2019.03.12 திகதி வரையிலும் குழுநிலை விவாதம் 2019.03.13 தொடக்கம் 2019.04.05 ம் திகதி வரையில் நடத்துவதற்கும் வரவு செலவு திட்டம் மீதான வாக்கெடுப்பு 219.04.05 ஆம் திகதி நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்த வரவு செலவு திட்டம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள் அமைச்சரவை கவனத்தில் கொண்டுள்ளது.

No comments:

Post a Comment