ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (27) பிற்பகல் அரசாங்க அச்சகத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.
அரசாங்க அச்சு நடவடிக்கைகளுக்காக பாரிய பங்களிப்பினை வழங்கும் இந்த நிறுவனத்தின் நடவடிக்கைகள் பற்றியும் அங்கு நிலவும் குறைபாடுகள் பற்றியும் அதிகாரிகளிடம் ஜனாதிபதி கேட்டறிந்தார்.
அச்சகத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதியை அச்சகத்தின் பொறுப்பதிகாரி திருமதி கங்காணி லியனகே வரவேற்றார்.
அத்துடன் ஜனாதிபதி பணிக்குழாமினரிடம் சுமூகமான கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.
தற்போது அச்சிடப்படும் “பொலன்னறுவை” நூலின் அச்சிடும் நடவடிக்கைகளையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.
No comments:
Post a Comment