விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள பால்மாக்களில் எதுவித எண்ணெய் வகையோ, நுண்ணுயிரோ இல்லை என சுகாதார அமைச்சின் சுற்றுச்சூழல் மற்றும் உணவு ஆரோக்கிய பதில் பணிப்பாளர் டொக்டர் சப்புமல் தனபால தெரிவித்தார்.
குழந்தைப் பால்மா அடங்கலாக, சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள பால்மா வகைகளின் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பை சுகாதார அமைச்சு ஏற்பதாக தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலிய, நியூசிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்தும், ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் பால்மாக்கள் தருவிக்கப்படுகின்றன.
இந்த நடைமுறையில் குறித்த நிறுவனங்களிடமிருந்து சுகாதார பாதுகாப்பு குறித்து முழுமையான அத்தாட்சி சான்றிதழ் பெறப்படுகிறது. இந்நாடுகளின் நவீன இரசாயன ஆய்வுகூடங்களில் சோதனை மேற்கொள்ளப்படுகின்றன. இலங்கையிலும் தர நிர்ணய பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
காலத்திற்கு காலம் மக்களை திசை திரும்பும் நோக்கில் இத்தகைய கருத்துக்களை பரப்பும் நபர்கள் பற்றிய சுகாதார அமைச்சு கவனம் செலுத்தி வருவதாக டொக்டர் சப்புமல் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களம்
No comments:
Post a Comment