பாதாள உலக குழு உறுப்பினரான புளூமெண்டல் சங்கவின் சகா கைது - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 27, 2019

பாதாள உலக குழு உறுப்பினரான புளூமெண்டல் சங்கவின் சகா கைது

பாதாள உலக குழு உறுப்பினரான புளூமெண்டல் சங்கவுக்கு நெருக்கமான ஒருவர் புறக்கோட்டை ஆட்டிருப்பு வீதி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 

கொழும்பு மத்திய வலய ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் குழுவால் இன்று அதிகாலை ஆட்டிருப்பு வீதி, கொரியாவத்தை பிரதேசத்தில் நடத்தப்பட்ட சுற்றி வளைப்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்படும் போது சந்தேகநபரிடமிருந்து 10 கிராமும் 460 மில்லி கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது. 

சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், கொழும்பு மத்திய வலய ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments:

Post a Comment