மூன்று நாட்களுக்கு முன் காணாமல் போன பெண் ஒருவரின் சடலம் மாவெலி ஆற்றிலிருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நாவலப்பிட்டி, பலந்தொட்ட பகுதியை சேர்ந்த 84 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயாரான எம். ஈனிமெனிகே என்பவரே இன்று (29) பிற்பகல் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த மூன்று நாட்களுக்கு முன் தனது சொந்த தேயிலை தோட்டத்திற்கு சென்ற போதே காணாமல் போனதாக உறவினர்களால் நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் பொலிஸ் மோப்ப நாயின் உதவியுடன் பொலிஸாரும் பிரதேசவாசிகளும் தேடுலில் ஈடுட்டிருந்த வேலையில் தேயிலை தோட்டத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திலிருந்து மாவெலி ஆற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதணைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பித்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
இராமச்சந்திரன்
No comments:
Post a Comment