காத்தான்குடி நகர சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினர் புதிய உறுப்பினராக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளருமான அஷ்ஷெய்க் ALM. சபீல் நளீமி நியமிக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற கட்சியின் காத்தான்குடி பிராந்திய ஆலோசனைக் குழு உறுப்பினர்களின் சந்திப்பில் எட்டப்பட்ட தீர்மானத்திற்கும், ஆலோசனைக்கும் அமைவாகவே இவர் தற்பொழுது நகர சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்டு காத்தான்குடி பிரதேசத்தில், இரண்டாம் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று நான்கு நகர சபை உறுப்பினர்களுடன் பிரதான எதிர்க் கட்சியாக காத்தான்குடி நகர சபையில் பதவி வகித்து வருகின்றது.
கடந்த தேர்தலை தொடர்ந்து பிராந்திய உயர்மட்ட சபையின் ஆலோசனைக்கு அமைவாக நகர சபை உறுப்பினர்களாக MBM பிர்தௌஸ் நளீமி, சகோதரர் இல்மி அஹமட் லெப்பை மற்றும் சகோதரி ரிபாயா, சகோதரி றகிபா ஆகியோர் நகர சபை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர். இதில் சகோதரர் அஷ்ஷெய்க் பிர்தௌஸ் நளீமி அவர்களின் இடத்திற்கு தற்பொழுது சபில் நளீமி நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போதைய நகர சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கும் சகோதரர் சபீல் நளீமி அவர்கள் NFGGயின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவர் என்பதுடன் கடந்த காலங்களில் NFGGயின் சிரேஷ்ட பதவிகளையும் வகித்து வந்துள்ளார். குறிப்பாக கடந்த காலங்களிலும் காத்தான்குடி நகர சபையில் NFGGயின் பிரதிநிதியா கடமையாற்றியுள்ளார்.
இவர் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பொதுச்செயலாளராக நீண்ட நாட்கள் கடமையாற்றி வந்துள்ளதுடன் முக்கிய சமூகப்பொறுப்புக்களை ஏற்று கடமையாற்றி வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment