மல்லார்ட் வாத்தினம் பூமியில் இருந்து முற்றிலும் அழிவு : கடைசி வாத்தும் இறந்தது - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 30, 2019

மல்லார்ட் வாத்தினம் பூமியில் இருந்து முற்றிலும் அழிவு : கடைசி வாத்தும் இறந்தது

உலகில் எங்கும் காணப்படாத ‘மல்லார்ட்’ இனத்தின் கடைசி வாத்தும் இறந்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் பசுபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள மிகச்சிறிய தீவு நியுவே. இந்தத் தீவில் உலகில் எங்கும் காணப்படாத ‘மல்லார்ட்’ இன வாத்துக்கள் வாழ்ந்து வந்தன. வேட்டையாடுதல் காரணமாக அழிந்து வந்த இந்த வகை வாத்துக்கள் கடந்த ஆண்டு 2000 மட்டுமே இருந்தன.

சில மாதங்களுக்கு முன்பு மல்லார்ட் இனத்தின் அனைத்து வாத்துக்களும் இறந்து விட, Trevor எனும் ஒரே ஒரு ஆண் வாத்து மட்டும் இருப்பதாகத் தெரியவந்தது. கடந்த ஆண்டு பத்திரிகையாளர் ஒருவர் அந்த ஆண் வாத்தை புகைப்படம் எடுத்து வெளியிட்ட பிறகு, உலகின் தனிமையான வாத்து என அது பிரபலமானது.

இந்நிலையில், மல்லார்ட் இனத்தின் கடைசி வாத்தும் இறந்துவிட்டது. கடந்த சில தினங்களுக்கு முன் புதர் ஒன்றில் நாய்களால் கடிக்கப்பட்டு வாத்து இறந்து கிடந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் மல்லார்ட் வாத்தினம் பூமியில் இருந்து முற்றிலும் அழிந்து போயின.

No comments:

Post a Comment